என்ன செய்வதென்ற கேள்விக்கு விடை தேடுகிறேன்
எப்படிச் செய்வதென்று விளக்கத்தோடு வந்து நிற்கிறாய்
அடுத்தடுத்து நகரும் போதெல்லாம் நியாயமேயின்றி உன்னை தள்ளிவிடுகிறேன்
என் கால்களை தாங்கிப் பிடித்து எனை ஏற்றிவிடுகிறாய்
அடித்து விட்டு வலிக்கிறதா என அப்பாவியாய் வினவுகிறேன்
இல்லயடி என்றே மற்றோர் கன்னத்தை காட்டுகிறாய்
நெருங்கி வந்துன்னை நெருப்பில் வேகவிட்டு குளிர்காய்கிறேன்
நீயே விறகாகி என்னையும் உள் இழுக்கிறாய்
உதறிவிட்டு விலகும் போதும் உதிரம் வடியும் கைகளோடு என்னையே பாதுகாக்கிறாய்
எல்லாம் சரி யார் நீ என்ற கேள்விக்கு மட்டும் விடையேயில்லை என் மனப்புத்தகத்தில்....!!!
EmoticonEmoticon